

உங்களுடைய ஆரோக்கிய உணவு என்ன?
எப்பவும் கோதுமை உணவை தான் எடுத்துப்பேன். மைதா மைதா வகை உணவுகளான ரொட்டி, நூடுல்ஸ் போன்றவற்றை தவிர்த்துட்டேன்.
புரதம் அதிகமுள்ள உணவை எடுத்துக்க ஆரம்பிச்சேன். 10 லேர்ந்து 12 கிலோ குறைச்சாச்சு. ஆர்கானிக் ஃபுட் தான் நிறைய சாப்பிடுவேன். பன்னீர், கீரை, வேக வைத்த காய்கறிகள், எல்லா வகை பழங்கள், முக்கியமா ஆப்பிள், பெர்ரி, பப்பாளி, ஆரஞ்சு அடிக்கடி சாப்பிடுவேன்.
ஸ்வீட்ஸ் சாக்லேட் சாப்பிடறதை கம்மி பண்ணிட்டேன். டார்க் சாக்லேட் சாப்பிடுவேன். முக்கியமா நொறுக்குத் தீனிக்கு நோ சொல்லிட்டேன். ஆரம்பத்துல கஷ்டமா இருந்தாலும் இப்ப என்னோட லுக் பார்த்து எல்லாரும் ஆச்சரியப்படறாங்க. அதனால் மனசை தேத்திக்கிட்டு இஷ்டத்துக்கு சாப்பிட்டாமே உடம்புக்கு எது நல்லதுன்னு பாத்து பாத்து சாப்பிடறேன்.
பெர்ரிஸ்: உடல் எடையை குறைக்க நினைச்சா பெர்ரிப் பழங்கள் கட்டாயம் சாப்பிடணும். ஏன்னா இதுல சுவையைத் தரும் ஆன்தோசையனின்கள், உடல் எடை கூடாமல் பார்த்துக்குது. இதை ஜூஸ் அல்லது சாலட் போன்றும் செய்து சாப்பிடுவேன். தினம் காலைல ஒரு ஆப்பிள் சாப்பிடுவேன். இதுல அதிகமான அளவு நார்ச்சத்துக்கள் இருப்பதால், அடிக்கடி பசிக்காது. ஆப்பிளில்ல குறைஞ்ச அளவு கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இருக்குன்னு தெரியும் அதோட ஆப்பிள் உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு செரிமானத்தையும் அதிகரிக்கிறது. இதனால் உடலில் அதிகமான அளவு கொழுப்புகள் சேராமல் இருக்கும்.
இதெல்லாம் தவிர, வெய்ஸ்ட் (இடை) ஷேப் கிடைக்கணும்னா சில வொர்க் அவுட் பண்ணனும். அதையும் செஞ்சிட்டிருக்கேன். ஷூட்டிங் இல்லாத நாட்கள்ல ரெகுலரா வாக்கிங் போறேன்.
உடற்பயிற்சி செய்வீங்களா? என்ன பயிற்சி?
நிச்சயம். உடலின் தேவையில்லாத எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள் ரெகுலரா செஞ்சா போதும். என்னோட பிஸிகல் ட்ரெயினர் வீட்டுக்கு வந்து சொல்லிக் கொடுத்த பயிற்சிகளை தொடர்ந்து பண்ணிட்டு இருக்கேன். புஷ் அப்ஸ், அப் எக்ஸர்சைஸ், பை செப்ஸ், ட்ரை செப்ஸ், ப்ளாங்க்னு நிறைய பயிற்சி செய்வேன். போர் அடிக்காம இருக்க வீக் டேய்ஸ்ல செய்வேன், சண்டே வொர்க் அவுட்டுக்கு லீவ் ....
தினமும் யோகா செய்வீங்களா?
எந்த வேலையா இருந்தாலும் அதை டென்ஷனா ஸ்ட்ரெஸா ஆக்கிக்காம இருக்கறது தான் எனக்குப் பிடிக்கும். ஏற்கனவே நான் ஈஸி கோயிங் கூல் டைப் தான். எப்பல்லாம் டைம் கிடைக்குதோ அப்ப யோகா பண்றேன். மனசையும் உடம்பையும் ரிலாக்ஸ் பண்ண யோகா தான் பெஸ்ட்.
ஸ்விம்மிங் தெரியுமா?
உடலை லைட்டா, ஸ்லிம்மா வைச்சுக்கறதுக்கு ஸ்விம்மிங் பண்றது எவ்வளவு நல்லதுன்னு நான் அனுபவபூர்வமா உணர்ந்திருகேன். இது ரொம்ப ஈஸி ஒர்க் அவுட். ஊர்ல ரெகுலரா ஸ்விம் பண்ணுவேன். சென்னைல ஸ்விம் பண்றதுக்கான சரியான இடம் இல்லை. ஷூட்டிங்காக வெளிநாடு போகறப்ப, இன்டோர்ல ஸ்விம்மிங் பூல் இருக்கான்னு தேடிப் போய் பண்ணுவேன். ஐ லவ் ஸ்விம்மிங்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.